7.1 மீனவர்களுக்கான நியாயமான வருவாய்
படிநிலை 1: பணி ஒப்பந்தப்படி பணம்செலுத்துகை/ இழப்பீடு வழங்கி பதியப்பட வேண்டும். பணி ஒப்பந்தகளில் தேவையான பண அளிப்பு மற்றும் பணம்செலுத்துவதற்கான இசைவையும் காட்டும் பதிவுகள் இருக்க வேண்டும். பணி ஒப்பந்தத்தில் பணியாளர்-பணிவழங்குபவர் உறவுநிலை தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். நிலுவைக் கடன் மீதான பணம் செலுத்தல்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
படிநிலை 2: குறைந்தது தேசியஅளவிலான தரநிலை அல்லது அதற்குமேல் இழப்பீடுகள் இருக்கவேண்டும். பணம் நேரடியாக தொழிலாளியிடம் கொடுக்கப்படுவது, ஏற்கப்பட்ட இழப்பீட்டின் வடிவில் கொடுப்பது, குறைந்தது தேசியத் தரநிலைக்குச் சமமான தொகை கொடுக்கப்படுவதை பதிவுகள் காட்டவேண்டும்.
படிநிலை 3: மாலுமிகளுக்கான நியாயமான இழப்பீடு. சம்பள ஆவணங்கள்- இதில் சம்பள பிடித்தங்களும் சேர்க்கப்பட்டிருக்கும் (அல்லது பணி ஒப்பந்தத்தில் பிடித்தங்களுக்கான காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்). பிணைத் தொழிலாளர் உட்பட நியாயமற்ற இழப்பீடு எதுவும் இருக்கக்கூடாது.
7.2 கடலில் பாதுகாப்பும் கவனமும்
படிநிலை 1: பாதுகாப்பு உடைகள், அவசரகால குடிநீர் மற்றும் அடிப்படை பாதுகாப்புப் பயிற்சி. ரேடியோக்கள் மற்றும்/ அலைபேசி (கடலோரம்). அடிப்படை பாதுகாப்புப் பயிற்சித் திட்டத்துடன் உடன்பாட்டுச் சான்று.
படிநிலை 2: கப்பல் மற்றும் மாலுமிகள் நன்றாக இருப்பதை உறுதிசெய்யும் உள்ளூர் கடலோர சேவை அதிகாரிகளோடு தினசரி தொடர்பு. மேம்பட்ட பாதுகாப்புப் பயிற்சி. அடிப்படை பாதுகாப்புப் பயிற்சி மற்றும் தளத்தில் முதலுதவி விநியோகம். உடன்பாட்டுச் சான்று. பாதுகாப்புப் பயிற்சி மற்றும் பதிவுகள், முதலுதவி, மருந்துப் பெட்டி, உயிர்காப்புப் படகுகள், பாதுகாப்பு உடை மற்றும் காப்பு அணிகள் (காலுறைகள், தலைக்கவசம், கையுறைகள், சுவாசக் கவசம் போன்றவை)
படிநிலை 3: கடலில் இருந்து நாட்டுக்குத் திரும்புதல். கப்பல் துறைமுக நுழைகை மற்றும் வெளியேறுதலின்போது தளத்தில் உள்ள மாலுமிகளின் பட்டியலுடன் சேர்ந்த அறிவிப்புகள். மாலுமிகளின் பட்டியலில் மீனவர்களின் புகைப்படங்கள் இருக்கவேண்டும். மருத்துவத் தேவை ஏற்பட்டால் வீட்டுக்குத் திரும்பலாம்.
படிநிலை 4: இபிஐஆர்பியின் 3 மற்றும் / அல்லது உயிர்காப்புப் படகு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகளுக்கு இணங்குதல். துறைமுகத்திற்கு உள்ளே நுழைகையிலும் வெளியேறுகையிலும் மாலுமிகள் பட்டியலை மின்னணுமுறையில் சமர்ப்பித்தல். பிரச்னைகளை சரிசெய்ய உதிரிபாகங்கள் மற்றும் பயிற்சி. தொடர் பயிற்சி மற்றும் ஆய்வுகள். உடன்பாட்டுச் சான்று.
7.3 வேலை நேரம்
படிநிலை 1: தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையில் வேலை நேர ஏற்பாடுகள். பணி ஒப்பந்தத்தில் இந்த ஏற்பாடு இருப்பதற்கான சான்று.
படிநிலை 2: குறைவான அளவு ஓய்வு நேரங்களைக் கடைப்பிடித்தல். ஒரு நாளில் குறைந்தளவு ஓய்வு நேரம் = 10 மணி நேரம் (வாரத்துக்கு 77 மணி நேரங்கள்). குறைந்தளவு ஓய்வு நேரத்திற்கான உடன்பாட்டுச் சான்று (பணியாளருக்கு நிறுத்த வேண்டியிருந்தால், அவர்கள் நிறுத்தவேண்டும்)
படிநிலை 3: நிலத்தில் குறைந்தது # நாட்கள் அல்லது மாதத்தில் துறைமுகம் மற்றும் ஒருமுறை கடலுக்குள் செல்லும்போது இருக்கும் அதிகபட்ச நேரம். துறைமுக நிறுத்தங்களைக் காட்டக்கூடிய குறிப்புப் புத்தகத்தையும் பதிவுகளையும் சோதிக்கவும்.
7.4 புகார் அமைப்பு
படிநிலை 1: அடிப்படை குறைகளுக்கான அமைப்பு இருத்தல் வேண்டும். புகார் உதவிக்கு ஒரு தொலைபேசி இணைப்பு எண் கொண்ட ஓர் அமைப்பு இருப்பதற்கான சான்று.
படிநிலை 2: குறைகளுக்கான அமைப்பு நியாயமாகவும் திறம்படவும் செயல்படுவதற்கான சான்று. ஒரு பணி ஒப்பந்தத்தில், பணியைத் துவங்குமுன்பாக “முன்பணம்” பெறப்படவில்லை என்று குறிப்பிட்டு இதை ஆவணப்படுத்த வேண்டும். புகார்கள் மற்றும் பரிகாரங்களுக்கான பதிவுகள்.
படிநிலை 3: பணியாளர்களுக்கு சங்கங்களில் கொடுக்கப்படும் சுதந்திரம். தொழிலாளர் அமைப்புகள் இருப்பதைக் காட்டக்கூடிய சான்று அல்லது தொழிற்சங்கப் பிளவு இல்லாமைக்கான சான்று.
7.5 சுகாதார வசதிகள்
படிநிலை 1: தூய குடி நீர். தூய்மையான வசிப்பிடம். பார்வையால் சோதித்தல், தன்னிச்சையான கள ஆய்வு, பின்னூட்ட அமைப்பு அல்லது பொருத்தமான நீர்த் தரச் சான்று.
படிநிலை 2: தூய்மையான வசிப்பிடம். பார்வையால் சோதித்தல், தன்னிச்சையான கள ஆய்வு, பின்னூட்ட அமைப்பு
படிநிலை 3: கழிவறை மற்றும் கழிப்பறை வசதிகளை சுத்தம் செய்தல். பார்வையால் சோதித்தல், தன்னிச்சையான கள ஆய்வு, பின்னூட்ட அமைப்பு, மற்றும் / அல்லது சுத்தம் செய்தலுக்கான பதிவு.
முந்தைய பாடம்அடுத்த பாடம்