6.1 முன் நிபந்தனைகள்
- மீனவர்களும் மாலுமிகளும் சட்டப்பூர்வமாக பதிந்துகொள்ள வேண்டும். மீனவர்கள் மற்றும் மாலுமிகளின் அரசாங்கப் பதிவு, படகோட்டும் கடவுச்சிட்டு போன்றவை சட்டப்பூர்வப் பதிவுசெய்யப்பட்டிருப்பதற்கான சான்று.
- பாகுபாடு கூடாது. இனம், பாலினம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருக்கக்கூடாது. பணியாளர்கள் உரிமைகள் குழுக்களின் தொலைபேசி எண்கள் போன்றவை பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
- இளவயது பணியாளர்கள் தவறாகப் பயன்படுத்துதலோ மற்றும் 15 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மீனவர்களாக பணியமர்த்தப்படக்கூடாது. குடும்ப நிறுவனங்களில், குழந்தைகள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ அனுமதியுண்டு. ஆனால், அந்தப்பணி அபாயகரமானதாக இன்றி, பள்ளிப்படிப்புக்கு ஊறு விளைவிக்காதபடி பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ சுயவிருப்பத்தோடு இருக்க வேண்டும். அவர்களது உறவினர்கள் மட்டுமே வழிகாட்டவும் மேற்பார்வை செய்யவும் அனுமதியுண்டு. அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரங்கள். சராசரியான பள்ளிப்படிப்புக்கு இடையூறாகவோ அல்லது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியக் கேடு தரத்தக்கவற்றை செய்யவோ 15-17 வயதுள்ள பணியாளர்களுக்கு அனுமதி இல்லை. பணியாளர் ஆவணங்களை சோதித்து இசைவை உறுதிசெய்ய வேண்டும்.
- எவ்வித கட்டாய பணியோ அல்லது ஒழுக்கக் குறைவான செயல்பாடுகளோ கூடாது. பதிவுகள் அல்லது கட்டாயப்பணி குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும்/ அல்லது மீகாமர்களிடம் உள்ளதா என சோதிக்கவும். எவ்வித ஆவணங்களும் (கடவுச்சீட்டுகள், அயல்நாட்டு நுழைவுச்சீட்டுகள் போன்றவை) நிறுத்திவைக்கப்படவில்லை என்ற படிநிலையைச் சேர்த்தல். பணியாளர்கள் உரிமைகள் குழுக்களின் தொலைபேசி எண்கள் போன்றவை குறித்து பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சான்று.
6.2 சமுக-கலாச்சார மற்றும் பொருளாதாரத் தாக்கம்
படிநிலை 1: அடிப்படை பங்குதாரர் வரைபடம் (பங்குதாரர்கள் பட்டியல், வளங்களைப் பயன்படுத்தும் வகை மற்றும் வளங்கள் மீதான அவர்கள் ஆர்வம். பங்குதாரர் பட்டியல், ஒவ்வொரு பங்குதாரரும் வளங்களைப் பயன்படுத்தும் விதம் குறித்த விளக்கம் மற்றும் வளங்களில் அவர்கள் ஆர்வத்தைக் கண்டறிதல். ஒவ்வுர் பங்குதாரரும் குறைந்தது ஒரு கண்டறியப்பட்ட பிரதிநிதியைக் கொண்டிருத்தல் (பெயர், தொடர்புத் தகவல்கள்).
படிநிலை 2: மீன்வளம் குறித்த விளக்கங்கள் மற்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான (நேர்மறை மற்றும் எதிர்மறை) சமூகக் காரணிகள் மற்றும் சூழியல் தாக்கங்கள். எப்படி பாதிப்புக்கு சாத்தியமுள்ள பங்குதாரர்கள் மதிப்பீட்டிற்கு கொடுத்த உள்ளீடுகள் குறித்த ஒரு விளக்கத்தை உள்ளடக்கிய முழுமையுற்ற மதிப்பீடுகளுக்கான சான்று மற்றும் அனைத்து தெரிந்த பங்குதாரர்களும் அத்தகு உள்ளீடுகளைத் தர இயலவில்லை எனில், அனைத்து அடையாளம் காணப்பட்ட பங்குதாரர்களும் எவ்வாறு உள்ளீடுகளைத் தர இயலவில்லை என ஒரு விபரக்குறிப்பைக் கொண்டிருக்கவேண்டும்.
படிநிலை 3: சமூகத் தாக்கங்களைக் கவனிக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் நடவடிக்கைத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். பங்கேற்பாளர்களின் பட்டியல்களுடன் கூடிய நிகழ்ச்சி நிரல்கள் (பங்குதாரர் வகைப்படி), விரிவான கலந்துரையாடல்களும் நடவடிக்கைத் திட்டங்களும் இருக்கவேண்டும். தொடர் சரிபார்ப்பு (முன்னேற்றங்களைக் கண்காணித்தல்) கூட்ட அறிக்கைகள் நிகழ்ச்சி நிரலைப் போலவே வைத்திருக்க வேண்டும்.
6.3 சமூகத்தில் அவசரகால நடவடிக்கைகள் இருத்தல்
படிநிலை 1: பேரிடர்களைக் கையாள சமூக அளவில் அவசரகால நடவடிக்கைகளும் திட்டங்களும் இருக்கவேண்டும். ஒரு செய்முறைப் பயிற்சி மற்றும் ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை சோதித்தல்.
படிநிலை 2: இயற்கைப் பேரிடர்களை அடிக்கடி கையாளத் தயாராக மீனவ சமுதாயங்கள் இருக்கின்றன. பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை சோதித்தல்.
முந்தைய பாடம்அடுத்த பாடம்