4.1 பங்குதாரர்களுடன் ஆலோசனை மற்றும் இணை மேலாண்மை
படிநிலை 1: மேலாண்மைப்பணியில் ஈடுபாடுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் கண்டறியப்பட வேண்டும். ஒரு பங்குதாரர் அடையாளம் காணும் செயல்பாட்டின் வழியாக அவர்கள் அடையாளம் காணப்படுவதை உறுதிசெய்தல். அடையாளம் காணும் செயல்பாட்டை மதிப்பிடுதலும், பேட்டிகாணலும் சாத்தியமானதும் ஏற்கத்தக்கதும் ஆகும். நிகழ்ச்சிக் குறிப்புகள், சுருக்கங்கள், ஆய்வுமுறைகள் போன்றவை. விளம்பரங்கள் அல்லது மன்ற அறிக்கைகள் (செய்தித்தாள்கள், இணையதளங்கள், சமூக ஊடகம் போன்றவை) ஆகியவை இருத்தல். தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் அறிக்கைகளின் மொழிபெயர்ப்புகள்.
படிநிலை 2: குறைந்தது மீன்பிடி மேலாண்மை அதிகாரிகள் மேலாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகளின் ஒருபகுதியாக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஆலோசிக்க வேண்டும். மீன்பிடி மேலாண்மை அதிகாரிகள் பங்குதாரர்களை வழக்கமாக சந்தித்து மீன்பிடி மேலாண்மை மற்றும் நிலை குறித்து கலந்துரையாடியதற்கான சான்று. மீனவ சமுதாயம், மீன்பிடித்துறை, கூட்ட நிரல் மதிப்பீடு, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, நிகழ்ச்சி நிரல் சுருக்கங்கள் போன்றவை குறித்து பங்குதாரர்களின் புகார்கள் இருக்கக்கூடாது.
படிநிலை 3: சோதிக்கத்தக்க ஒத்துழைப்பு, சர்ச்சைகளைக் கையாளுதல், உறுதியான உனவுப் பாதுகாப்பு/வாழ்வியல் தொடர்புகளுடன் கூடிய வழக்கமான பங்குதாரர்களின் உரிமைகள் போன்றவைகொண்ட ஒப்பந்த கட்டமைப்பு இருத்தல். சட்டபூர்வ கட்டமைப்புக்கான சான்று.
படிநிலை 4: மீன்பிடித்துறையை ஆளும் மேலாண்மை விதிகள் சார்ந்து முடிவெடுப்பதில் பங்குதாரர்களின் பங்கேற்பிற்கு ஆக்கப்பூர்வமாக வகைசெய்யும் ஓர் இணை மேலாண்மை ஆட்சி இருக்கவேண்டும். மேலாண்மை திட்டமிடல் செயல்பாட்டில் பங்கேற்பை எளிதாக்கும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு இருக்க வேண்டும்.
படிநிலை 5: ஒரு உரிமைகள் அடிப்படையிலான மேலாண்மையாட்சியை நோக்கிய நகர்வு இருந்தால் பொருத்தமானதா என பங்குதாரர்கள் தீர்மானிக்க வேண்டும். பங்குதாரர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கான சான்று.
4.2 திறன்மிக்க அமலாக்கம்
படிநிலை 1: தேவைகளும் சட்ட அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகள் மற்றும்/அல்லது கண்காணிப்பு அடையாளம் காணப்பட வேண்டும். அறிக்கை, கூட்ட நிரல் அல்லது ஜிஏபி ஆய்வு. ஒரு அபாய அடிப்படையிலான கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கவனத்தையும் குறிக்கும்.
படிநிலை 2: சில ஒழுங்கு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று. மீன்பிடி முகமைகளிடமிருந்து ரோந்துக் கப்பல்களின் எண்ணிக்கை, இயங்கு நிலை, நீரில் இருக்கும் நாட்கள், கடலில் கைப்பற்றுதல் எண்ணிக்கை மற்றும் கப்பல்கள் போதிய அளவில் மீன்பிடிப் பகுதியில் பரவியிருத்தல். அனுமதிகளும் அபராதங்களும் உடன்பாடற்ற முறையை போதிய அளவு அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்புகள் மீது செயல்படுத்தப்பட்டு பொதுவில் கிடைக்கும்படி இருக வேண்டும் (அல்லது சட்டப்பூர்வமாகப் பேணவேண்டும்). பார்வையாளர்கள், கடலில் சோதனைசெய்தல். சட்டவிரோத மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை, பிடிபட்டவை, காவலில் வைக்கப்பட்டவை, வெடித்தவை.
படிநிலை 3: தொடர்புடைய சட்டத் தேவைகளுக்கேற்ப (மீன்பிடித் துறைக்குரிய மாநில, தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள்) ஒழுங்கு நடவடிக்கைகள் வலுவாக செயல்படுத்தப்படுவதற்கான சான்று மற்றும் ஐயுயு மீன்பிடிப்பு அளவு <25% இருப்பதைத் தெரிந்திருத்தல். நீதிமன்ற வழக்குகள், மீன்வளத்துறையினால் மீன்பிடித்துறைச் சட்ட மீறல்கள் என்ணிக்கை மற்றும் அதைத் தொடர்ந்த வழக்குகள் பொதுவில் அறிக்கையிடப்பட வேண்டும். உடன்பாடுகள் கீழ்க்கண்ட வகைகளில் வெளிப்படுத்தப்படுவதை சான்றாகக் கொள்ளலாம்.
- ஆய்வுகள்/ரோந்துகளின் எண்ணிக்கை,
- கண்டறியப்பட்ட ஊடுருவல்கள் மற்றும்
- வெற்றிகரமான வழக்குகளின் எண்ணிக்கை.
உடன்பாட்டு நிலை அதிகரிக்கையில், (ii) மற்றும் (iii) அதிக நேரத்தைக் குறைத்து அதேநேரம் (i) அப்படியே நிலைத்திருக்க வேண்டும்.
4.3 மேலாண்மை திட்டமிடல்
படிநிலை 1: நீடித்த பயன்பாட்டுக்கான மீன்பிடித் துறைக்குத் தேவையான போதிய மேலாண்மை பங்குதாரர்களுக்கிடையிலான ஒப்பந்தம் கொண்டிருக்கவேண்டும். ஒரு கூட்டப் பதிவு மற்றும் பங்குதாரர் ஒப்பந்தச் சான்று.
படிநிலை 2: மீன்பிடித்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான மேலாண்மை ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஏற்பாடுகள் தெளிவாக, எளிதில் புரியக்கூடியதாகவும் மீனவர்களுக்குக் கிடைக்கும்படியும் இருக்க வேண்டும்.
படிநிலை 3: போதிய அளவு நிதிவசதி கொண்ட பொதுவில் கிடைக்கக்கூடிய ஒரு மேலாண்மைத் திட்டம் வேண்டும். மேலாண்மைத் திட்டம் மதிப்பிடப்படவும், அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுப் பட்டியலையும் கொண்டிருக்கவேண்டும்.
4.4 மீன்பிடிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள்
படிநிலை 1: மீன்பிடித் துறையில் உள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் இயங்கும் கப்பல்கள் தெரிந்திருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் குறித்த அலுவலகப் பதிவேடுகள் மீன்பிடித்துறையில் உண்டு.
படிநிலை 2: மீன்பிடித் துறையில் பங்கேற்கும் அனைத்துப் படகுகளும் (மீன்பிடி படகு, பயணியர் படகு) பதிவுசெய்யப்பட்டு/உரிமம் வழங்கப்பட்டு (உள் நாடு/வெளிநாடு) இருக்கவேண்டும். படகும் மீன்பிடி நடவடிக்கையும் அங்கீகரிக்கப்பட்ட சான்று இருக்க வேண்டும். மீனவர்கள்/கப்பல் முதலாளிகளுக்கு பதிவு எண் அல்லது அடையாள எண் இருக்க வேண்டும்.
படிநிலை 3: மீன்பிடி இயந்திரங்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுதல் மற்றும்/அல்லது நேரம்/பகுதித் தேர்வும் (பேணுகை மேலாண்மை அளவீடுகள் கணக்கில் கொள்ளப்படுதல்). இவற்றில் ஒன்று அல்லது மேலதிக அளவீடுகள் செயல்படுத்தப்பட்ட சான்று.
படிநிலை 4: கட்டுப்பாடுகள் (உள்ளிடுகை அல்லது வெளிச்செல்கை (மீன் இருப்பு வரையறைக் குறிப்புப் புள்ளி (எல்ஆர்பி)க்கு அதிகம் இருத்தல்) அல்லது இணைந்து) மீன்பிடிப்பை சீராக்குவதற்கு உள்ளன. இந்த சீர்படுத்தும் கட்டுப்பாடுகள் சரிபார்க்கப்பட்ட சான்று.
4.5 கப்பல் கொள்திறன் மேலாண்மை
படிநிலை 1: கொள்திறன் மேலாண்மையில் பங்குதாரர்கள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள். கூட்டங்கள் குறித்த குறிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கு என்ன, என்ன கிடைத்தது, தேதி, இடம், கலந்துகொண்டவர்கள் யார் போன்றவை உள்ளிட்ட ஆலோசனையில் கிடைத்ததை சரிபார்த்து கொள்திறன் மேலாண்மை முடிவெடித்தலில் பங்குதாரர்கள் கலந்துகொள்ளும் செயல்பாட்டிற்கான சான்று.
படிநிலை 2: மீன்வளம் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது மீதான ஒப்பந்தம் (எத்தனை கப்பல்கள், நிகர அளவுகள், மீன்பிடிப்பு ஒதுக்கீடு போன்றவற்றை தீர்மானித்தல்). கூட்டங்கள் குறித்த குற்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கு என்ன, என்ன கிடைத்தது, தேதி, இடம், கலந்துகொண்டவர்கள் யார் போன்றவை உள்ளிட்ட ஓர் ஒப்பந்தத்திற்கான சான்று. அறிவியல், பொருளாதார அல்லது பிற தொடர்புடைய படிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அல்லது வழிகாட்டியாகக் கொண்டு மீன்பிடித் திறனை அளவிட்டு முடிவுகளைப் பெறுதல்.
படிநிலை 3: கப்பல் கொள்திறன் கட்டுப்பாடு மீதான முறையான ஒப்பந்தம் (தேவையெனில் கொள்திறன் குறைப்பை உள்ளடக்கி) இருக்கவேண்டும். முறையான ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்தச் செயல்பாடுகள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
முந்தைய பாடம்அடுத்த பாடம்