எம்ஃபிஷ் ஒரு உலகளாவிய பொது-தனியார் கூட்டமைப்பில் வணிகரீதியாக சாத்தியமான அலைபேசி நுட்பத்திறனைப் பயன்படுத்தி நடைமுறைத் தீர்வுகளை உருவாக்கி மீன்பிடித்தலை மேலும் நிலையானதாக ஆக்கவும் மீனவர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சமூகத்தையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒன்றாகும்.
சவால்
கடந்த பல பத்தாண்டுகளாக, வளர்ந்துவரும் உலகில் சிறிய அளவிலான மீனவர்கள் அதிகரித்துவரும் சவால்களை சந்தித்துவருகிறார்கள். அதிக மீன்பிடிப்பால் அவர்களுக்கு மீன் கிடைப்பது குறைந்துவருகிறது. எரிபொருளுக்காக மேலும் மேலும் அதிகப் பணம் செலவிடுவதோடு, கடலில் மீன்பிடிப்பதற்காக அதிகநேரம் இருந்து செலவை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. பெரிய கப்பல்கள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதிலும் அதிகரித்துவரும் போட்டியை அவர்கள் சந்திக்கிறார்கள். பிடிக்கப்படும் மீன்களில் மனித உணவாகப் பயன்படும் 50 சதவீதம் சிறு மீனவர்கள், கைபிடி மீனவர்கள் மூலம் கிடைத்தாலும் வறுமையில் வாடும் இச்சமூகத்தில் உள்ள இந்த மீனவர்களின் வாழ்க்கை சிக்கலானது. அதேநேரம், 2014ல் அலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.3 பில்லியனாக, அதாவது பூமியில் உள்ள மொத்த மக்கள் தொகையைவிடவும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அலைபேசி பயன்பாட்டின் இந்த மாபெரும் வளர்ச்சியினால், அலைபேசி தளத்தைப் பயன்படுத்தி உயிர்களைக் காக்கவும் கண்டுபிடிப்பாளர்களுக்கு முன்னெப்போதுமில்லாத வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
உடன்பாடு
எம்ஃபிஷ், முதன்முதலாக அமெரிக்க மாகாண செயலாளர் ஜான் கெர்ரியினால் 2014 ஜூன் மாதம் 17ம் தேதி நடந்த நமது பெருங்கடல் கலந்துரையாடல் நிகழ்வில் மீனவர்களுக்கும் சந்தைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி மேம்பட்ட மீனவ மேலாண்மையைக்கான திறனை உருவாக்கவும் மீனவ வலைப்பின்னலை உருவாக்கவும் துவக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அலைபேசி தொழில்நுட்பப் புரட்சியை மூலதனமாகக் கொண்டு மக்களின் வாழ்வினை மேம்படுத்தவும் சிறு மீனவர்கள், கைபிடி மீனவர்களின் நிலையான வாழ்வை உறுதிசெய்யவும் கீழ்க்கண்ட கூட்டாளிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்:
- யுஎஸ் ஸ்டேட் டிபார்ட்மெண்டின் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான அலுவலகம்
- ஜிஎஸ்எம் சங்கம்
- எகோஹப்
- இந்தோனேஷியாவின் கடல்விவகார மற்றும் மீன்வள அமைச்சகம்
தி பில்லர்ஸ்
எம்ஃபிஷ் அலைபேசி சேவைகளைப் பயன்படுத்தி நிகழ்நேரத் தகவல்களை அளித்து மீனவர்கள், மேலாளர்கள் மற்றும் கடலுணவுத் துறை தொடர்புகொள்ள உதவவும், தரவுகளை தடையின்றி பகிரவும், தகவல்களை அணுகவும் உதவுகிறது. அலைபேசி சேவைகளை மீன்பிடிப்பு தரவுகளை சேகரிக்கவும் ஆய்வுசெய்யவும் பயன்படுத்துவதோடு, சட்டவிரோத மீன்பிடிப்பினை கண்காணிக்கவும், கடலுணவுக்கான விநியோகச் சங்கிலியைக் கண்டறியவும், பாதுகாப்பான மீன்பிடிப்பை மேம்படுத்தவும் பயன்படுகிறது. எம்ஃபிஷ் கீழ்க்கண்ட நான்கு கூறுகளில் கவனம் செலுத்தும்:
- நிலை நாட்டுதல்: மீன்பிடிப்பை நிலைநிறுத்தி மீன்பிடி கிராமங்களின் பொருளாதார நிலைகளை மேம்படுத்துதல்.
- ஈடுபாடு: குறைவான சேவையளிக்கப்படும் மீன்பிடி சமூகங்களைக் கண்டடைதல், கற்றுத்தருதல் மற்றும் ஈடுபாடு காட்டுதல்.
- அலைபேசி தொழில்நுட்பத் தீர்வுகள்: அலைபேசி சேவைகளைப் பயன்படுத்தி மீனவர்கள், மேலாளர்கள் மற்றும் கடலுணவுத் துறையினர் தொடர்புகொள்ளவும், தகவல்களை அணுகவும், தரவுகளை தடையின்றிப் பகிரவும் நிகழ்நேர தகவல்களை அளித்தல்
- செயலாற்றல்: மீனவர்களை சந்தைகளுடன் தொடர்புபடுத்தி மேம்படுத்தப்பட்ட மீன்வள மேலாண்மைக்கும் மீனவர்களிடையே வலைத்தொடர்பை உருவாக்கி திறனை உருவாக்குதல்.
குறிப்புரை: யுஎஸ் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் இணையதளம்
இந்தத் தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிறுபடங்களுக்காக லினியாவுக்கு நன்றி